காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தியுள்ளது.
ஆனால், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினர் வெளியேறும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காஸா மீது கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,200ஐத் தாண்டியுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென்று போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.30 மணி முதல் இஸ்ரேலின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் அமைதியாகின.
இந்த போர் நிறுத்தத்தை ஏற்க ஹமாஸ் தீவிரவாதிகள் மறுத்துவிட்டனர். காஸாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறும் வரை எங்களின் தாக்குதல் தொடரும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.