Publish Date: Sun, 18 Jan 2009 (17:59 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
அல்காய்டா மற்றும் தாலிபான்களுடன் கடும் மோதல் நடந்து வரும் வடமேற்குப் பாகிஸ்தானில் இன்று 15 தீவிரவாதிகளும் 1 படையினரும் பலியாகியுள்ளதாக படைத்தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மொஹ்மாண்ட் பழங்குடியினர் பகுதியில் இன்று காலை நடந்த மோதலில் 15 தீவிரவாதிகளும், ஒரு துணை ராணுவப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் மோதலில் இதுவரை 1,700க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் இப்பகுதியில் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகச் சண்டையிடும் தீவிரவாதிகளைப் பாகிஸ்தான் படைகள் ஒடுக்குவது குறித்து அமெரிக்கா வரவேற்புத் தெரிவித்துள்ளது.