ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்பட்டு வரும் ஜெர்மன் தூதரகத்தின் மீது இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது சஹீர் அசிமி கூறுகையில், இது திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதல். இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ஜெர்மன் தூதரத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு தாலிபான் இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.