Publish Date: Sat, 17 Jan 2009 (13:03 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
வன்னி பகுதியில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு நகர், சுற்றயல் பகுதிகளில் சிறிலங்கப் படையினர் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர் என்று புதினம் இணையத் தளம் தெரிவிக்கிறது.
சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுவன் ஒருவன் உட்பட 3 பேரும், தேரா என்ற இடத்தில் குடியிருப்புக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேபோல புதுக்குடியிருப்பில் உள்ள கைவேலி, கோம்பாவில் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்களின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.