Publish Date: Fri, 16 Jan 2009 (16:50 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பசீர் கான் கோரி கூறுகையில், மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மலைப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் சஃபர் ராணுவப் பட்டாளத்தின் தளபதி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இவ்விபத்தில் 13 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு ராணுவ அதிகாரி கூறினார்.