தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஆனையிறவு மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கொழும்புவில் அதிபர் மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடந்த சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்பில், ஆனையிறவு தற்போது சிறிலங்கப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக மகிந்த அறிவித்தார்.
வவுனியாவில் இருந்து ஆனையிறவு வழியாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலை 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறிலங்க அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.