Publish Date: Thu, 08 Jan 2009 (14:04 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (14:04 IST)
பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் சர்வதேச பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்பதால் வெடிகுண்டு வைப்பது, தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் பயங்கரவாதிகள் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக எஃப்.பி.ஐ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பதவியேற்பு விழா நடைபெற உள்ள கேபிடல் ஹில் பகுதியைச் சுற்றியுள்ள நட்சத்திர விடுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், உணவகங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றின் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை பாதுகாப்பு செயலர் மைக்கேல் செர்டாஃப் கூறுகையில், ஒபாமா பதவியேற்பு விழாவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.