Publish Date: Wed, 07 Jan 2009 (19:38 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (19:38 IST)
முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமத்தில் உள்ள பழைய கண்டி வீதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 7 படையினரின் சடலங்களையும், அவர்கள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
அம்பகாமம் பழைய கண்டி வீதி வழியாக நேற்று காலை 10.00 மணிக்கு சிறிலங்க இராணுவத்தினர் முன்னேறத் துவங்கியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி தெரிவிக்கிறது.
இந்த மோதலில் கொல்லப்பட்ட சிறிலங்க படையினரின் 7 சடலங்களையும், அவர்கள் போட்டுவிட்டு ஓடிய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட சிறிலங்க இராணுவத்தினரின் 7 சடலங்களும் இன்று புதுக்குடியிருப்பில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் புதினம் தெரிவிக்கிறது.
Webdunia
Publish Date: Wed, 07 Jan 2009 (19:38 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (19:38 IST)