Publish Date: Wed, 07 Jan 2009 (12:50 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (12:47 IST)
வங்கதேசத்தின் புதிய பிரதமராக அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையின் அயலுறவு, உள்துறை பதவி பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பிரமாண்டமாக பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் இயாஜுதீன் அகமது, தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 23 அமைச்சர்களும், 8 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம், புதிய அமைச்சரவையின் அயலுறவு அமைச்சர் பதவி டிபு மோனிக்கும், உள்துறை அமைச்சர் பதவி சஹாரா கதனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்தில் அமைந்துள்ள புதிய அரசில் 3 பெண்கள் (பிரதமர் உட்பட) இடம் பெற்றுள்ளனர்.