Newsworld News International 0901 05 1090105077_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவில் பேருந்து விபத்து: 13 பேர் பலி

Advertiesment
சீனா பேருந்து விபத்து பீஜிங் குவாங்டோங்
, திங்கள், 5 ஜனவரி 2009 (18:06 IST)
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குவாங்டோங் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவாங்டோங் மாகாணத்தின் தலைநகர் குவாங்ஸ்ஹோவில் இருந்து கிஸோவ் பகுதியில் உள்ள யான்ஹி என்ற இடத்திற்கு 44 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இப்பேருந்து, 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உடனடித் தகவல் வெளியிடப்படவில்லை. விபத்திற்குள்ளான பேருந்தில் அனுமதிப்பட்ட எண்ணிக்கயிலான பயணிகளே சென்றதால் பேருந்து பள்ளத்தில் விழுந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil