காஸா சண்டையில் பொது மக்களைக் குறிவைத்துக் கொல்வது மற்றம் காயப்படுத்துவதை ஹமாசும் இஸ்ரேலும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சண்டையில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் சர்வதேச மனிதநேயச் சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து, பொது மக்களையும் பொதுக் கட்டடங்களையும் தாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு வலியுறுத்தியுள்ளது.
மோதலில் அதிக எண்ணிக்கையிலான அப்பாவிகள் கொல்லப்பட்டுவது மற்றும் மருத்துவமனைகள் சேதப்படுத்தப்படுவது ஆகிய சம்பவங்கள் குறித்துத் தான் கவலை அடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் இயக்குநர் பியரி கிரஹென்புல் கூறியுள்ளார்.
பொது மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ராக்கெட்டுகளை வீசுவது சர்வதேசச் சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த டிசம்பர் 27 முதல் காஸா பகுதியில் நடந்து வரும் மோதல்களில் 512 பேர் பலியாகியுள்ளன௦ர் என்றும், இதில் 31 பேர் பொது மக்கள் என்றும் காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.