Publish Date: Sat, 03 Jan 2009 (18:41 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (18:24 IST)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.
கோட்டை பாங்குசாலா வீதியில் பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் இன்று பிற்பகல் 5.15 மணிக்கு நடந்துள்ள இந்தக் குண்டு வெடிப்பில் ஏழு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்தில் படையினர் குவிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.