Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் வயதான பெண்மணி உயிரிழந்தார்

Advertiesment
லிஸ்பன் வயதான பெண் மரியாடிஜீசஸ்
, சனி, 3 ஜனவரி 2009 (18:41 IST)
லிஸ்பன்: உலகின் வயதான பெண்மணியாகக் கருதப்படும் பெண்மணி தனது 115வது வயதில் உயிரிழந்தார்.

போர்ச்சுகீசிய பெண்மணியான மரியா-டி-ஜீசஸ் நேற்று பிற்பகல் டோமர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை வழக்கம் போல் உணவை உட்கொண்ட மரியா, அடுத்த சில நிமிடங்களிலேயே வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மரியாவை, உலகின் அதிக வயதுள்ள பெண்மணியாக கின்னஸ் புத்தகம் கௌரவித்திருந்தது. கடந்த 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி பிறந்த மரியா, தனது 57 வயதில் கணவரை இழந்தார்.

இதன் பின்னர் விதவையாகவே தனது வாழ்வைக் கழித்த மரியாவுக்கு 11 பேரக் குழந்தைகளும், 16 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil