Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 3 March 2025
webdunia

ஹாலிவுட் நடிகர் டிரவோல்டா மகன் வலிப்பு நோய்க்கு உயிரிழந்தார்

Advertiesment
ஹாலிவுட் நடிகர் டிரவோல்டா மகன் வலிப்பு நோய்க்கு உயிரிழந்தார்
, சனி, 3 ஜனவரி 2009 (12:28 IST)
முன்னணி ஹாலிவுட் நடிகர்களில் ஒருவரான ஜான் டிரவோல்டாவின் 16 வயது மகன் வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

விடுமுறையை கழிப்பதற்காக பஹமாஸில் உள்ள டிரவோல்டாவுக்கு சொந்தமான வீட்டிற்கு சென்ற அவரது மகன் ஜெட், தான் தங்கியிருந்த அறையில் உள்ள குளியலறையில் மயங்கி கிடந்ததை ஊழியர் கண்டுள்ளார்.

இதையடுத்து ஜெட் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜெட் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வலிப்பு நோய் பாதிப்பு உள்ள ஜெட், குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது வலிப்பு நோய் தாக்கியதால் தரையில் விழுந்திருக்கலாம் என்றும், இதில் அவரது தலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரேதப் பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே உண்மையான காரணத்தைக் கூற முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil