Publish Date: Fri, 02 Jan 2009 (18:31 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (18:31 IST)
கொழும்புவில் உள்ள சிறிலங்க விமானப் படைத் தலைமையகம் அருகில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் விமானப் படையினர் ஒருவரும், பொது மக்கள் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
மேலும், 16 விமானப் படையினர் உள்பட 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியை சிறிலங்கப் படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து தலைநகர் கொழும்புவில் கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் நடந்து கொண்டிருந்த போது, விமானப்படைத் தலைமையகத்தின் முன்பு தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் விமானப் படைத் தலைமையகம் நோக்கி வந்த இரண்டு மர்ம நபர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர்கள் குண்டை வெடிக்கச் செய்ததாகக் காவலர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்துள்ளவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கொழும்பு பொது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.