Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தடையை சமாளிக்க பெயரை மாற்றியது ஜமாத்-உத்-தவா

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தடையை சமாளிக்க பெயரை மாற்றியது ஜமாத்-உத்-தவா
, வெள்ளி, 2 ஜனவரி 2009 (17:55 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு குழு விதித்துள்ள தடை உத்தரவை சமாளிக்க, ஜமாத்-உத்-தவா அமைப்பு தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லஷ்கர்-ஈ-தயீபாவின் முதன்மை துணை அமைப்பான ஜமாத்-உத்-தவா தனது பெயரை தெஹ்ரீ-ஈ-ஹுர்மத்-ஈ-ரஸூல் (கடவுளின் மரியாதையை காக்கும் அமைப்பு என்று பொருள்) என்று மாற்றிக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசின் நெருக்குதலை தவிர்க்கவே ஜமாத்-உத்-தவா அமைப்பு தனது பெயரை மாற்றிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேரணி ஒன்றில் தெஹ்ரீ-ஈ-ஹுர்மத்-ஈ-ரஸூல் என்று பெயரிட்ட அமைப்பு பங்கேற்றது. இதில் ஜமாத்-உத்-தவா அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டதை வைத்தே இந்திய அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் அளித்துள்ள பேட்டியில், ஜமாத்-உத்-தவா அமைப்பு புதிய பெயரில் செயல்படத் துவங்கிவிட்டதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil