Publish Date: Fri, 02 Jan 2009 (14:31 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (14:31 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை சிறிலங்க இராணுவம் கைப்பற்றிவிட்டதாக கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்துள்ள சிறிலங்க அரசின் பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச, கிளிநொச்சியை விட்டு விடுதலைப் புலிகள் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர்கள் கூட்டத்தில் இது குறித்து தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறிய கோத்தபய ராஜபக்ச, விரைவில் பிரபாகரனை பிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த ஒரு பேட்டியில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சிறிலங்க இராணுவம் கைப்பற்றி வருவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் ப. நடேசன், கிளிநொச்சியை நாங்கள் இழந்தால் கூட அது போரின் முடிவாக இருக்காது என்றும், தமிழர் பகுதிக்குள் நுழைந்த சிறிலங்க இராணுவத்தை மீண்டும் திரும்ப விடமாட்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.