Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஸா தாக்குதல்களில் குழந்தைகள் பலி அதிகரிப்பு

Advertiesment
காஸா தாக்குதல்களில் குழந்தைகள் பலி அதிகரிப்பு
காஸாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஹாமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் குறைந்தது 37 குழந்தைகளும், 17 பெண்களும் பலியானதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது.

காவல்துறை குடியிருப்பு வளாகம், தீயணைப்பு நிலையங்கள், ஹமாஸ் ஆட்சியாளர்களின் வீடுகள், பல்கலைக் கழக கட்டிடங்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படைகள் தாக்குதல்களை நடத்தி வருவதால் குடியிருப்பு பகுதிகளே தாக்குதலுக்கு அதிகம் இலக்காவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil