பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வசித்து வந்த ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றை வீசி இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இஸ்ரேல் தரைப்படை காஸா எல்லையில் தயார் நிலையில் உள்ளதாகவும், உத்தரவு கிடைத்தவுடன் பாலஸ்தீனத்தின் மீது படையெடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான நிஸார் ரயான் வீட்டின் மீது நேற்று நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் நிஸார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பகுதியில் இன்றும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.