பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தானில் தாலிபான்கள், அல்-கய்டா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள மலைப்பாங்கான பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியில் தெற்கு வசிரிஸ்தானின் கரிகோட் கிராமத்தில் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆயுதம் ஏந்திய மூன்று நபர்களும், மற்ற இரு ஏவுகணைத் தாக்குதல்களில் தலா ஒரு நபரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அயல்நாட்டினர் அல்லது அப்பகுதி மக்கள் யாரும் உயிரிழந்தனரா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.