Publish Date: Wed, 31 Dec 2008 (14:08 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (13:28 IST)
படைகளில் சிறுவர்களைச் சேர்ப்பது இல்லை என்று சிறிலங்கப் படைத்தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துச் சிறிலங்கப் படைத்தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கர கூறியதாகப் புதினம் இணைய தளம் தெரிவிப்பதாவது:
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த மொகொட்டிக ரவி துஸ்மந்த (அடையாள அட்டை எண் : 911780313V) என்பவரின் புகைப்படத்தை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத் தளம் வெளியிட்டது.
அந்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் பெயரும் சரி. ஆனால், அடையாள அட்டை மட்டும் போலியாக விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது. படைத்தரப்பிற்கு எதிரான பிரச்சாரத்திற்காக அது உருவாக்கப்பட்டுள்ளது.
படை அணிகளில் நாங்கள் சிறுவர்களைச் சேர்ப்பது இல்லை என்றார் அவர்.
Webdunia
Publish Date: Wed, 31 Dec 2008 (14:08 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (13:28 IST)