முல்லைத் தீவில் கடும் மோதல்: சிறிலங்க இராணுவத்திற்கு பலத்த அடி
, திங்கள், 29 டிசம்பர் 2008 (13:11 IST)
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவுப் பகுதியைக் கைப்பற்ற சிறிலங்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டதில் 68 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை கைப்பற்ற மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்ததையடுத்து, முல்லைத் தீவின் மீது கடந்த சனிக்கிழமை மிகப் பெரிய தாக்குதலை சிறிலங்க இராணுவம் தொடுத்தது.சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு எரிகணை, பல்குழல் பீரங்கித் தாக்குதலுடன் முன்னேறிய சிறிலங்க படையினரை விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு கடுமையான பதிலடி கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து நடந்த உக்கிரமான போரில் சிறிலங்கப் படையினர் 68 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 17 பேரின் உடல்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.இத்தாக்குதலின் முடிவில் சிறிலங்க படையினரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சிறிலங்க இராணுவத்தினரின் உடல்களுன் மற்றும் ஆயுதங்களின் படங்களையும் புலிகள் வெளியிட்டுள்ளனர்.முல்லைத் தீவு களப் புகைப்படங்கள்