Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்சைக்குரிய பகுதியில் இந்தியக் கப்பல் நுழைந்தது ஏன்? விளக்கம் கேட்டது பங்களாதேஷ்

Advertiesment
சர்சைக்குரிய பகுதியில் இந்தியக் கப்பல் நுழைந்தது ஏன்? விளக்கம் கேட்டது பங்களாதேஷ்
, சனி, 27 டிசம்பர் 2008 (18:40 IST)
வங்கக்கடலில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனைக்குரிய, எண்ணெய் வளம் மிக்க பகுதியில் இந்தியக் கப்பல் நுழைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது ஏன் என்று இந்தியத் தூதரிடம் பங்களாதேஷ் விளக்கம் கோரியுள்ளது.

பங்களாதேஷ் அயலுறவுச் செயலர் முகமது தெளஹித் ஹோசைன், இந்தியத் தூதர் பினாக் ரஞ்சன் சக்கரவர்த்தியிடம் அளித்துள்ள புகாரில், வங்கக்கடலில் இரு நாடுகளுக்கிடையே பிரச்சனைக்குரியதாக கருதப்படும் கடல் பகுதியில் இந்திய கப்பல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது கண்டனத்திற்கு உரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக் காணவே விரும்புவதாக புகார் கடிதத்தில் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டின் அயலுறவு அமைச்சக ஆலோசகர் இஃப்திகார் அகமது சௌத்ரி கூறுகையில், சர்சைக்குரிய பகுதி யாருக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்யும் வரை ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை இந்தியா தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

சர்வதேச விதிகளுக்கு பங்களாதேஷ் மதிப்பு அளிப்பதைப் போல், அனைத்து அண்டை நாடுகளும் மதிப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த செப்டம்பரில் கடல்சார் எல்லைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளோம். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை அளிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம் என்றும் சௌத்ரி அறிக்கையில் கூறியுள்ளார்.

ஓரிரு தினங்களுக்கு முன் இந்தியக் கப்பல் பங்களாதேஷ் எல்லையில் உள்ள வங்கதேசக் கடல் பகுதியில் ஆய்வுப் பணிக்காக நுழைந்ததைத் தொடர்ந்து, அதனை விரட்டும் நோக்கத்துடன் பங்களாதேஷும் 3 போர்க் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியது.

எனினும், இந்தியக் கப்பல் அப்பகுதியில் இருந்து வெளியேறாத காரணத்தால் இந்தியத் தூதரிடம் பங்களாதேஷ் விளக்கம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil