Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 3 March 2025
webdunia

லிஃப்ட் விபத்து: சீனாவில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் பலி

Advertiesment
லிஃப்ட் விபத்து: சீனாவில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் பலி
, சனி, 27 டிசம்பர் 2008 (14:20 IST)
சீனாவின் ஹுனன் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிஃப்ட் விபத்துக்குள்ளானதில் 17 பேர் இன்று உயிரிழந்தனர்.

ஹுனன் மாகாணத் தலைநகர் சாங்ஷாவில், ‘ஷாங்காய் சிட்டி’ எனப் பெயரிடப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமானத் திட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் லிஃப்ட் செயலிழந்ததால், அதில் பயணித்துக் கொண்டிருந்த 17 கட்டுமானத் தொழிலாளர்களும் இன்று உயிரிழந்ததாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த ஒரு கட்டுமானத் தொழிலாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil