Publish Date: Fri, 26 Dec 2008 (18:15 IST)
Updated Date: Fri, 26 Dec 2008 (18:08 IST)
இந்தியாவுடன் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில், கூடுதல் படைகளை பாகிஸ்தான் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது தகவல்களை அளிக்க மறுத்து விட்டதாக டெய்லி டைம்ஸ் நாளிதழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் முக்கிய நகரான லாகூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாகிஸ்தானின் 10வது பிரிகேட் படையும், ஜீலம் பகுதிக்கு 3வது பிரிகேட் படையும் முன்னேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் அந்நாட்டு ராணுவத்தின் 10வது, 11வது பிரிவுப் படைகள் காஷ்மீரின் ரஜோவ்ரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், சாஸ்மா மின் உற்பத்தி நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாகிஸ்தான் விமானப்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Fri, 26 Dec 2008 (18:15 IST)
Updated Date: Fri, 26 Dec 2008 (18:08 IST)