Publish Date: Fri, 26 Dec 2008 (11:22 IST)
Updated Date: Fri, 26 Dec 2008 (11:21 IST)
பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் கராச்சிக்கு அருகே இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கராச்சியில் இருந்து தென்மேற்கே 305 கி.மீ தொலைவில், பூமிக்கடியில் 7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக இணையதள தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடித் தகவல் எதுவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
Webdunia
Publish Date: Fri, 26 Dec 2008 (11:22 IST)
Updated Date: Fri, 26 Dec 2008 (11:21 IST)