Publish Date: Tue, 23 Dec 2008 (15:25 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (15:24 IST)
சிறிலங்க அரசு இலங்கைத் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்துகிறது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திப் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர குற்றம்சாற்றியுள்ளார்.
மாத்தளை என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மங்கள சமரவீர, "சிறிலங்காவில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களை மத ரீதியாக மகிந்த ராஜபக்ச அரசு பிளவுபடுத்தி வருகிறது" என்று குற்றம்சாற்றியதாகப் புதினம் இணைய தள செய்தி கூறுகிறது.