Publish Date: Tue, 23 Dec 2008 (12:26 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (12:21 IST)
தைவானின் தெற்குப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.4 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8.04 மணியளவில் காவோஸியுங் நகருக்கு அருகே பூமிக்கடியில் 50 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாகத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.