Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யு.எஸ் ஏவுகணைத் தாக்குதல்: பாக்.கில் 8 பேர் பலி

யு.எஸ் ஏவுகணைத் தாக்குதல்: பாக்.கில் 8 பேர் பலி
, திங்கள், 22 டிசம்பர் 2008 (13:57 IST)
பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தானில் உள்ள கரிகோட், ஷின் வர்சாக் கிராமங்களின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகம் தெரிவித்த அவர்கள், தலிபான் அல்லது அல்-கய்டா பயங்கரவாத இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றனர்.

ஆப்கன்- பாகிஸ்தான் எல்லையில் தலிபான், அல்-கய்டா அமைப்பின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அமெரிக்க ராணுவம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil