அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் அல்-சைதியை மலேசிய அயலுறவு அமைச்சர் ரெய்ஸ் யாடின் பாராட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையின் ஆண்டு விழாவை முன்னிட்டு கோலாலம்பூரில் நேற்றிரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் பேசிய ரெய்ஸ் யாடின், அதிபர் புஷ் மீது ஷூ வீசி, அவருக்கு பிரியாவிடை அளித்த அல்-சைதிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும் ஈரான், இராக், வடகொரியா போன்ற நாடுகளின் வெறுப்பைச் சம்பாதித்தவர் மீது பயன்படுத்தப்பட்ட சரியான ஆயுதம் இது (ஷூ) என்றார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஈராக்கிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட அதிபர் புஷ், அந்நாட்டு பிரதமர் நூரி அல்-மாலிகியை சந்தித்துப் பேசிய பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்த அல்-சைதி, தனது காலில் உள்ள ஷூக்களை சுழற்றி புஷ் மீது வீசினார். எனினும் புஷ் சாதுர்யமாக நகர்ந்து கொண்டதால் தாக்குதலில் இருந்து தப்பினார்.