மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்துத் தண்டிக்க பாகிஸ்தான் உண்மையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காண்டலீசா ரைஸிடம், மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை போதுமானதாக உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த காண்டலீசா ரைஸ், மும்பைத் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு சில நேர்மறையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கையே போதுமானது என்று சொல்ல முடியாது. குற்றவாளிகளை கண்டறிய இந்தியாவுக்கு பாகிஸ்தான் உண்மையான ஒத்துழைப்பு அளிப்பது அவசியம் என்றார்.