Publish Date: Sat, 20 Dec 2008 (12:42 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (12:42 IST)
சீனாவின் ஜியாங்ஷி பகுதியில் ஓடும் சன்ஜியாங் நதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை அப்படகு கவிழ்ந்த போது அதில் 44 பயணிகள் இருந்ததாகவும், ஆற்றில் தத்தளித்தவர்களில் 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி தெரிவிக்கிறது.
முதற்கட்ட விசாரணையில் 10 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 44 பேர் சென்றதால் அதிக பாரம் காரணமாக படகு கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.
Webdunia
Publish Date: Sat, 20 Dec 2008 (12:42 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (12:42 IST)