ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சந்திரிகா கௌர் என்ற அப்பெண்ணின் பெற்றோர் இந்தியாவில் மருத்துவர்களாக உள்ளனர்.
தனியார் விமானப் பயிற்சி மையத்திற்கு சொந்தமான இலகு ரக சிறிய விமானத்தில் நேற்று பயிற்சி மேற்கொண்ட சந்திரிகா கௌரின் விமானம் மீது அப்பகுதியில் பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானம் மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த சந்திரிகாவின் விமானம் அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சந்திரிகா, அவருடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்தனர்.
மற்றொரு விமானம் சிறிய சேதத்துடன தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 விமானங்களும் நடுவானில் மோதிக் கொண்டதை ஆஸ்ட்ரேலிய ராடார் கண்காணிப்புக் குழு உறுதி செய்துள்ளது.