Publish Date: Thu, 18 Dec 2008 (12:25 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
ஜெய்ஷ்-ஈ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸார் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இல்லை என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏ.பி.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மசூத் அஸார் பாகிஸ்தான் அரசால் தேடப்படும் குற்றவாளி. அவர் எங்கள் பாதுகாப்பில் இல்லை எனத் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய மௌலானா அஸாரைப் பாகிஸ்தான் அரசு கைது செய்து விட்டதாக கடந்த வாரம் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சௌத்ரி அகமது முக்தார் தொலைக்காட்சி பேட்டியில் கூறிய நிலையில், அஸார் தங்கள் பாதுகாப்பில் இல்லை என அமைச்சர் ஷா மெஹ்மூத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.