Publish Date: Wed, 17 Dec 2008 (16:29 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எந்த ஆதாரத்தையும் தங்களிடம் இந்தியா இதுவரை தரவில்லை என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக “நியூஸ்” நாளிதழுக்கு அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், மும்பை தாக்குதல் குறித்த ஆதாரங்களை பலமுறை நாங்கள் கேட்டும் அதுபற்றி சம்பிரதாய முறையிலோ அல்லது சம்பிரதாயமற்ற முறையிலோ இந்திய அரசு அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், இதுதொடர்பான புலனாய்வுக்காக உயரதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்புவது, தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக கூட்டு புலனாய்வுக் குழுவை அமைப்பது குறித்த பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்கும் இந்தியா இதுவரை செவி சாய்க்கவில்லை என்றார்.
எனினும் தூதரகங்கள் வாயிலாக தொடர்புகள், தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.