தாய்லாந்தின் ஜனநாயகக் கட்சித் தலைவரான அபிஷித் வெஜ்ஜாஜிவா அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில் அபிஷித் 235 வாக்குகள் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தக்-ஷின் ஷினவட்ராவின் ஆதரவாளரும், தேசிய காவல்படையின் முன்னாள் தலைவருமான பிரச்சா புரோமோன்க் 198 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ள அபிஷித் வெஜ்ஜாஜிவா, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் (ஜனநாயகக் கட்சி) தலைவராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.