Publish Date: Mon, 15 Dec 2008 (12:02 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (12:01 IST)
அமெரிக்காவின் அதிபராக கடைசி முறையாக ஈராக்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற அதிபர் ஜார்ஜ் புஷ், இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் சென்றார்.
தலைநகர் காபூர் அருகே உள்ள பஹ்ராம் ராணுவ விமானதளத்தில் அமெரிக்க அதிபரின் சிறப்பு விமானம் தரையிறங்கியதாக அதிபருடன் பயணம் செய்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு நடத்தும் அதிபர் புஷ், அமெரிக்க ராணுவ வீரர்களையும் சந்தித்துப் பேசுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.