Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிட்டன் பிரதமரை கொல்ல அல்-கய்டா தீட்டிய திட்டம் முறியடிப்பு

பிரிட்டன் பிரதமரை கொல்ல அல்-கய்டா தீட்டிய திட்டம் முறியடிப்பு
, வெள்ளி, 12 டிசம்பர் 2008 (18:15 IST)
புருசெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் கோர்டன் ப்ரௌன் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைவர்களை கொலை செய்வதற்காக அல்-கய்டா தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், புருசெல்ஸ்ஸில் நடக்கும் 2 நாள் ஐரோப்பிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பவர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளை பெல்ஜியம் காவல்துறையினர் நேற்று கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 14 பேரில் 4 பேர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 2 பேர் கடந்த 2007 இறுதியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு திரும்பியதாகவும், தற்கொலைப் படையைச் சேர்ந்ததாக கருதப்படும் 3வது நபர் கடந்த வாரம்தான் நாடு திரும்பினார் என்றும் பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களைத் தவிர கைது செய்யப்பட்டுள்ள மேலும் 10 பேர் பயங்கரவாதிகளுக்கு உடை, உறைவிடம் வழங்கியதுடன் தகவல் தொடர்பு பணிகளில் உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புருசெல்ஸ் நகரம் முழுவதிலும் மொத்தம் 16 இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல் லெய்ஜி நகரின் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிராக பெல்ஜியம் வரலாற்றிலேயே மிகப்பெரிய தேடுதல் வேட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil