Publish Date: Wed, 10 Dec 2008 (20:10 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 55 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 115க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி அருகில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் புதன்கிழமை காலை 9.00 மணி முதல் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 75க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர் என்றும், படையினரின் 12 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று புதினம் இணைய தள செய்தி கூறுகிறது.
இதேபோல, கிளிநொச்சியின் தெற்கு எல்லையான முறிகண்டிக்கு வடமேற்கில் உள்ள புதுக்குளம் பகுதியிலும் புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடந்த கடும் மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி புதினம் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு மோதல்கள் குறித்தும் சிறிலங்கப் படைத்தரப்பு இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.