Publish Date: Sun, 07 Dec 2008 (14:39 IST)
Updated Date: Sun, 07 Dec 2008 (14:39 IST)
அமெரிக்கப் படையினருக்குப் போர்த் தளவாடங்களை ஏற்றிச்செல்லும் டிரக்குகளின் மீது பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆயுதமேந்திய தாலிபான்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பெஷாவர் நகரத்தில் உள்ள வளாகம் ஒன்றின்மீது நடந்த இந்தத் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைத் தாலிபான்கள் ஏவியுள்ளனர். இதில் காவலாளி ஒருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேய கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தத் தாக்குதலில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் நிரம்பிய வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆனால் இதில் உயிர்ப்பலி ஏதும் இல்லை.
Webdunia
Publish Date: Sun, 07 Dec 2008 (14:39 IST)
Updated Date: Sun, 07 Dec 2008 (14:39 IST)