Publish Date: Wed, 03 Dec 2008 (11:57 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (11:57 IST)
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்க அயலுயுறவு அமைச்சர் காண்டலீச ரைஸ் இன்று இந்தியா வந்திறங்கியுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் அவர் புதுடெல்லியில் வந்திறங்கினார். அவர் இந்திய தலைவர்களை சந்தித்து விவாதிக்கவுள்ளார்.
மும்பை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் குழுவே காரணம் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, விசாரணையில் இந்தியாவிற்கு ஒத்துழைப்பு தருமாறு பாகிஸ்தானைக் கோரியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக அமெரிக்க அயலுயுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வந்துள்ளார்.