Publish Date: Mon, 01 Dec 2008 (12:34 IST)
Updated Date: Mon, 01 Dec 2008 (12:34 IST)
மின்கோரா: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ சோதனைச் சாவடிக்கு அருகே இந்த தற்கொலைத் தாக்குதல் இன்று நடந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அதிகாரி ஒருவர், தற்கொலைப்படை பயங்கரவாதி சோதனைச் சாவடியை நெருங்குவதற்கு முன்பாகவே தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததால், இதில் ஒரு ராணுவ வீரர் மட்டுமே காயமடைந்தார்.
ஆனால் அவ்வழியாக சென்று கொண்டிருந்த 2 கார்களில் இருந்த 7 பேர் உயிரிழந்து விட்டனர் என்றார்.
Webdunia
Publish Date: Mon, 01 Dec 2008 (12:34 IST)
Updated Date: Mon, 01 Dec 2008 (12:34 IST)