Newsworld News International 0811 29 1081129068_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை நட்சத்திர விடுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

Advertiesment
இலங்கை நட்சத்திர விடுதி கொழும்பு மும்பை அதிபர் மகிந்தா ராஜபக்ச
, சனி, 29 நவம்பர் 2008 (19:03 IST)
மும்பையில் உள்ள 2 நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள விடுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் கொழும்புவில் உள்ள நட்சத்திர விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ச, நட்சத்திர விடுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டியதற்கான அவசியத்தை தற்போது உணர்ந்துள்ளதாக கூறினார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 195 பே‌ர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்த ராஜபக்ச, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil