இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் இணைய தளம் செய்தி கூறுகிறது.
பொத்துவில் வனப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு ஊடுருவி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில், படையினர் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.