மும்பை தாக்குதல்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 'சில சக்தி'களுக்குத் தொடர்புள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதை மறுத்துள்ள பாகிஸ்தான், பயங்கரவாதத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானிற்குத் தொடர்பு உள்ளது என்ற தகவலை உடனடியாக மறுத்த அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேசி, "எங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். இதனால் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
மேலும், பயங்கரவாத பிரச்சனையை அரசியலாக்காதீர்கள். இது ஒரு பொதுவான பிரச்சனை. நாம் ஒரு பொதுவான எதிரியைச் சந்தித்து வருகிறோம். இந்த எதிரியை வீழ்த்த நமது கரங்கள் இணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.