Publish Date: Thu, 27 Nov 2008 (21:34 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (20:39 IST)
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களை அடுத்து, பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவிற்கு உதவத் தாங்கள் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களின் உயரதிகாரிகள், பயங்கரவாத முறியடிப்பு அதிகாரிகள் கூட்டம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நடந்தது.
இதையடுத்து வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், மும்பை நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்தியாவிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளாகவும் கூறியுள்ளது.
முன்னதாக தாஜ் நட்சத்திர விடுதியில் நடந்த மோதலில் அமெரிக்கப் புலனாய்வுத் துறை உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.