Publish Date: Thu, 27 Nov 2008 (12:00 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (12:00 IST)
மும்பையில் பயங்கரவாதிகள் நேற்றிரவு நடத்திய வெறியாட்டத்தை வன்மையாக கண்டித்துள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இச்சமயத்தில் மும்பை மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வியட்நாம் நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதீபா, இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். மேலும் மும்பை மக்கள் இக்கட்டான சூழலில் அமைதி காப்பதுடன், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மும்பை காவல்துறையும், அதிகாரிகளும் நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்றும் பிரதீபா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.