Publish Date: Thu, 27 Nov 2008 (04:34 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (04:33 IST)
மும்பையில் புதன்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். தாக்குதலில் பலியான, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் மும்பை மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
"நாங்கள் நிலைமையை மகிவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் இந்த தொடர் தாக்குதலை சமாளிக்க இந்திய அதிகாரிகளுக்கு உதவ தாயாராக இருக்கிறோம்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 27 Nov 2008 (04:34 IST)
Updated Date: Thu, 27 Nov 2008 (04:33 IST)