வெனிசூலாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்நாட்டின் அதிபர் ஹுகோ சாவேஸின் இடதுசாரிக் கூட்டணிக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், எதிர்க்கட்சிகள் பல முக்கிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இனிவரும் காலங்களில் அதிபர் சாவேஸ் அரசுக்கு நெருக்கடியான, சவாலான நிலை காணப்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், அந்நாட்டில் 22 இடங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், 17 இடங்களில் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையைக் கொண்ட கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 2 இடங்களில் மீண்டும் தக்க வைத்துக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி, தற்போது அரசின் வசமிருந்த கராகஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.