பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்தியர்களில் 101 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இரண்டு நாட்டு உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நாளை (25ஆம் தேதி) நடக்கவுள்ளதை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலையாக உள்ளவர்களில் 99 பேர் மீனவர்கள், மற்ற 2 பேர் அறியாமையினால் எல்லையைத் தாண்டிய அப்பாவிகள் ஆவர்.
இஸ்லாமாபாத்தில் இன்று இத்தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத் தலைமைச் செயலர் ரஹ்மான் மாலிக், இந்தியாவுன் தனது சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.